மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புது புத்துணர்வுடன் செயல்பட வேண்டிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத சில கனவுகள் நிறைவேறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீங்கள் நினைப்பதைவிட சாதிக்க கூடிய நல்ல நாளாக அமையும். தன்னம்பிக்கை அதிகரித்து காணப்படும்.
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மனதில் புத்துணர்வு பெறவும். அவன் மனைவிக்கு இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு நடந்து கொள்வீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு மற்றவர்களுடைய ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் இணக்கம் ஏற்படும். இதுவரை உங்களுக்கு இருந்த பகை, போட்டிகள் குறையும்.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மனதில் இருக்கும் குழப்பங்கள் தீரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு தொல்லை கொடுத்துவந்த எதிரிகள் உடைய சூழ்ச்சிகளை முறியடித்து காட்டுவீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்கள் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகப் போகிறது. கணவன் மனைவி பிரச்சனைகள் தீரும். ஆரோக்கியம் பலம் பெறும்.
கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எதிர்பார்க்கும் விஷயங்கள் சில தடை தாமதங்களுக்கு பிறகு வெற்றி அடையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் வெளியிட பயணங்களின் பொழுது கவனமுடன் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இனம் புரியாத மகிழ்ச்சி உண்டாகும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக அமைய இருக்கிறது. ஆரோக்கியத்தை கவனியுங்கள்.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்வதை தவிர்க்கவும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் எடுக்கும் முடிவுகளில் கவனம் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய முயற்சிகள் பலனளிக்கும். குடும்ப ஒற்றுமைக்கு குறைவிருக்காது. சகோதர சகோதரிகளுக்கு இடையே இருந்த மன கஷ்டங்கள் தீரும். பொருளாதார ஏற்றம் சிறப்பாக இருக்கும்.
கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கவலைகள் நீங்க கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பணவரவு கிடைப்பதில் கால தாமதங்கள் ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மற்றவர்கள் முன்னிலையில் மதிப்புடன் நடத்தப் படுவீர்கள். உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு மனதிற்கு பிடித்த வேலை அமையும்.
துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் நீண்ட நாள் எதிர்பார்த்த நல்ல செய்தி ஒன்று காத்திருக்கிறது. குடும்பத்தில் புதுவரவு ஒன்று மன மகிழ்ச்சியை உண்டாக்கும். தொழில் மற்றும் வியாபார ரீதியான போட்டி பொறாமைகள் குறையும். வாடிக்கையாளர்கள் நன்மதிப்பை பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக போட்டியாளர்கள் ஒத்துழைப்பு கொடுப்பார்கள். பண விஷயத்தில் கவனம் தேவை.
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் நினைத்ததை சாதித்துக் காட்டுவீர்கள். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் நெருக்கம் மேலும் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் நீங்கள் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு மனிதர்களின் சூழ்ச்சியை முறியடிக்கும் திறமை, தன்னம்பிக்கை பெருகும். ஆரோக்கியம் மேம்படும்.
தனுசு: தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் எதிலும் கவனம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு வீண் விரையங்கள் ஏற்படும் என்பதால் கூடுமான வரை ஆடம்பர செலவுகளை தவிர்த்து கொள்வது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரித்து காணப்படும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் பிரச்சனைகள் தீர அமைதி காப்பது நல்லது.
மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மனம் மகிழும் சில செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். தொல்லை கொடுத்துவந்த எதிரிகள் தொல்லை நீங்கும். விட்டு சென்ற உறவுகள் உங்களை தேடி வந்தடைய வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பண வரவுகளை பெரிய இடையூறுகள் ஏற்படலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள்.
கும்பம்: கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் அமைதி நிலவும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் அதிகரிக்கும். கணவன் மனைவிக்கு இடையே புரிதல் உண்டாகும். தொழில் மற்றும் வியாபார ரீதியான வர்த்தகம் சிறப்பாக அமைய இருக்கிறது. கொடுக்கல் வாங்கல் தொடர்பான விஷயங்களில் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் நினைத்ததை சாதித்துக் காட்டுவீர்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மேலும் மேலும் உங்களுடைய திறமைகளை வளர்த்துக் கொள்ளக் கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மனதில் நினைத்த பொருள் ஒன்றை வாங்கி மகிழும் வாய்ப்புகள் அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு நினைத்த காரியம் ஒன்று தடைகளுக்குப் பின் நிறைவேறும். ஆரோக்கியம் மேம்படும்.