மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. தொலை தூர இடங்களில் இருந்து கிடைக்க வேண்டிய தொகைகள் திடீரென கைக்கு வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பயணங்கள் மூலம் அனுகூலம் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் சாதுரியமாக எதையும் சாதிப்பது நலமாகும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள்.
ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாளில் எதிலும் கவனம் தேவை. தேவையற்ற விஷயங்களை மனதில் போட்டு குழப்பிக் கொள்கிறீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு வாடிக்கையாளர்கள் இடத்தில் நன்மதிப்பு உண்டாகும். என்றோ செய்த புண்ணியம் இன்று உங்களுக்கு பலன் அளிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் மாறும். ஆரோக்கியம் கவனம் தேவை.
மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் முன்னேற்றம் நிச்சயம் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதில் சாதகமான பலன்கள் உண்டாகும். கணவன் மனைவி உறவுக்கு இடையே இருந்த பிரச்சினைகள் தீரும். ஆரோக்கியம் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.
கடகம்: கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைப்பதை சாதிக்கக் கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு உற்றார் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நண்பர்களுடைய உதவிக்கரம் தகுந்த சமயத்தில் கிடைத்து நெகிழ்வை உண்டாகும். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் மேலும் வலுவாக வாய்ப்புகள் என்பதால் விட்டு கொடுத்து செல்வது நல்லது.
சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிலும் உற்சாகம் தொற்றிக் கொள்ளும் அற்புத நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த மந்தநிலை மாறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்களுடன் ஏற்பட்ட சண்டை சச்சரவுகள் நீங்கும். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் மனக்கசப்புகள் நீங்கும். பரஸ்பர ஒற்றுமை மேலோங்கும். உங்களை புரிந்து கொள்ளாதவர்கள் புரிந்துகொள்ள முயற்சி செய்வார்கள்.
கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நினைத்தது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் தேவையற்ற குழப்பங்களை தவிர்த்து நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்கோபத்தை குறைத்துக் கொண்டு மேல் அதிகாரிகளுடன் இணக்கமாக செல்வது நல்லது. கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். ஆரோக்கியம் சீராக இருக்கும்.
துலாம்: துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் பெரிய தொகையை ஈடுபடுத்தி அதிக லாபம் காணும் வாய்ப்புகள் அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வெளியிட பயணங்களின் பொழுது கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. எதிர்பாராத இடங்களிலிருந்து எதிர்பார்த்த தொகை கைக்கு வந்து சேரும். உங்களுடைய கோபத்தை அடக்கி ஆள்வதால் நிம்மதி அடையலாம். ஆரோக்கியம் மேம்படும்.
விருச்சிகம்:
விருச்சிகராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தேவையற்ற வீண் விரயங்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் அதிகரித்து டென்ஷன் ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மன நிம்மதி இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் நீங்க ஒருவரை ஒருவர் மனம் விட்டு பேசிக் கொள்வது நல்லது. ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள்.
தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. கொடுக்கல் வாங்கல் தொடர்பான பிரச்சினைகள் தீரும். தடைப்பட்ட சுப காரிய முயற்சிகளில் நல்ல பலன் கைகூடி வரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மனதில் இருந்து வந்த கேள்விகளுக்கான விடை கிடைக்கும். தொழில் மற்றும் வியாபார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக அமைய இருக்கிறது. புதிய கூட்டாளிகளை இணைத்துக் கொள்ளும் வாய்ப்புகள் உண்டு. ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பார்க்கும் விஷயங்கள் எதிர்பார்த்தபடி நடக்கும் யோகம் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு தொழில்ரீதியான பயணம் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். புதிய நபர்களுடைய சந்திப்பு அமையும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். கணவன் மனைவி பிரச்சனைகள் முடிவுக்கு வரும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
கும்பம்: கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் கூடுமானவரை கவனத்துடன் இருப்பது நல்லது. யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்களை ஏற்கும் பொழுது பெரிய தொகையை ஈடுபடாமல் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய முயற்சிகள் சாதகப் பலனை கொடுக்கும். உங்களுக்கு இருந்து வந்த போட்டி, பொறாமைகள் மறையும். சகோதர சகோதரிகளுக்கு இடையே இருந்த மனக்கசப்புகள் தீரும்.
மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூல பலனை கொடுக்க கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. எதிர்பாராத இடங்களிலிருந்து பண வரவு சிறப்பாக அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு எதிர்பார்க்கும் வருமானம் அமையும். உத்யோகத்தில் இருப்பவர்கள் உடைய வேண்டுதல் பலிக்கும். சோம்பல் துறந்து தன்னம்பிக்கையுடன் செயல்பட கூடிய நல்ல நாளாக இருக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள்.