மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலம் தரும் நல்ல அமைப்பாக இருக்கிறது. சொன்ன சொல்லை காப்பாற்ற போராடுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு சிந்தனையில் குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் வெளி வட்டாரத்தில் புதிய அனுபவத்தை பெறுவீர்கள். ஆரோக்கியத்தை கவனியுங்கள்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மன அழுத்தம் குறைவதற்கு நிறையவே வாய்ப்புகள் உண்டு. உங்களுக்கு பிடித்தவர்களுடன் நல்ல செய்திகளை பகிர்ந்து கொள்வீர்கள். கணவன் மனைவி ஒற்றுமைக்கு விரிசல் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு மனநிறைவு இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் திடீர் கோபத்தை கட்டுப்படுத்த முயற்சிப்பது நல்லது.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தில் அமைதி நிலவும். உற்றார் உறவினர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய உங்களால் முடிந்த உதவிகளை செய்வீர்கள். கணவன் மனைவிக்கு இடையே நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு ஓயாத அலைச்சல் ஏற்படக்கூடும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் முக்கிய நபர்களின் ஆதரவு பெறுவதில் வெற்றி பெறுவீர்கள்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக இருக்க போகிறது. வழக்கு தொடர்பான விஷயத்தில் சாதகமான தீர்ப்புகளை எதிர்பார்க்கலாம். அடுத்தவர்களுடைய பிரச்சனைகளில் மூக்கை நுழைக்காமல் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு தேவையற்றவர்களின் தலையீடு அதிகம் இருக்கும் கவனம் தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பெரிய தொகையை கையாளுவதில் கவனத்துடன் இருப்பது அவசியமாகும்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் முக்கிய முயற்சிகள் அனுகூல பலன் கொடுக்கும் இனிய நாளாக இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பொருளாதார ரீதியான ஏற்றம் சிறப்பாக இருக்கும் இதனால் சேமிப்பு உயரும். புதுயுகத்தில் உள்ளவர்களுக்கு நீண்ட நாள் ஆசைகள் ஒவ்வொன்றாக பூர்த்தி அடைய கூடிய அற்புதமான அமைப்பாகும். ஆரோக்கியம் சீராகும்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய உழைப்பில் பெருமிதம் கொள்ளும் இனிய நாளாகும். அடுத்தவர்களை நம்பி இல்லாமல் சுய முடிவு எடுப்பது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்கள் முடிந்த வரை தேவையற்ற பொருட்கள் வாங்குவதில் செலவு செய்யாமல் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் இடமாற்றம் குறித்த விஷயங்களில் சாதக பலன் பெறுவீர்கள்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனாவசிய செலவுகளை தவிர்ப்பது நல்லது. உழைப்பால் உயரக்கூடிய நாளாகும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் எதிர்பாராத அதிர்ஷ்டத்தை கொடுக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் மறைமுக எதிரிகளின் தொல்லைகளை சகிக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். எதையும் ஒரு முறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்ப்புகள் நீங்கி எதிலும் உற்சாகம் உண்டாக கூடிய அமைப்பாக இருக்கிறது. குடும்பத்தில் உள்ளவர்களுடைய எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வீர்கள். தேவையற்ற கடன்கள் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு சமூகத்தில் உயர்ந்த நபர்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கொடுக்கல் வாங்கல் பிரச்சனைகள் ஏற்படக்கூடும் என்பதால் கவனம் தேவை.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் வீண் அலைச்சல் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் உண்டு என்பதால் முன்கூட்டியே திட்டமிட்டு எந்த ஒரு விஷயத்திலும் ஈடுபடுவது நல்லது. கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் நெருக்கம் அதிகரிக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு நீண்ட நாட்கள் இழுப்பறியில் இருந்த சில விஷயங்கள் எளிதாக முடியும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்ப தேவைகள் பூர்த்தியாக கூடிய இனிய நாளாக இருக்கிறது. கணவன் அல்லது மனைவிக்கு உங்கள் மீது இருக்கும் நம்பிக்கை அதிகரிக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு வாழ்க்கை தர உயரக்கூடிய வருமான உயர்வு ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் கிடைக்கின்ற வாய்ப்புகளை கைநழுவ விடாமல் இருப்பது நல்லது. சுப காரிய தடைகள் விலகும்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எந்த ஒரு விஷயத்திலும் அவசரம் இல்லாமல் இருப்பது நல்லது. பொறுமை கடலினும் பெரிது என்பதை உணர்ந்து செயல்படுங்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு உணர்ச்சிவசப்படக் கூடிய அமைப்பாக இருப்பதால் நிதானத்தை கையாளுவது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உங்கள் மீது சுமத்தப்பட்ட வீண் பழி மறையும். ஆரோக்கியம் மேம்படும்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தில் இருக்கும் மகிழ்ச்சி அதிகரிக்க கூடிய இனிய நாளாக இருக்கிறது. தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதன் மூலம் மன உளைச்சலில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம். இனிய பாடல்கள் கேட்பது மனநலத்திற்கு நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புதிய முயற்சிகள் துவங்குவதில் கவனம் தேவை. முன் பின் தெரியாதவர்களின் அறிமுகம் தவிர்ப்பது உத்தமம்.