மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத திடீர் திருப்பங்களை கொடுக்கும் இனிய நாளாக அமைய இருக்கிறது. நீங்கள் தேடிக்கொண்டிருந்த கேள்விக்கான விடை கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு மறைமுக எதிரிகளின் தொல்லை வரலாம் என்பதால் சாதுர்யத்துடன் செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பயணங்களில் இனிமை உண்டு.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலம் தரக்கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பணவரவு கணிசமாக உயர கூடிய வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் இணக்கம் உண்டாகும். கணவன் மனைவி இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முயற்சி செய்வீர்கள்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் முன் வைத்த காலை பின் வைக்காமல் செயல்படுவது நல்லது. தயக்கத்தை உதறித் தள்ளுங்கள். கணவன் மனைவி ஒற்றுமைக்கு குறைவிருக்காது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு விருத்தி காணும் யோகம் உண்டு. உத்தியோகஸ்தர்களுக்கு நீண்டநாள் நிலுவையில் இருந்து வந்த கடன் பாக்கிகள் வசூலாகும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் வீண் விரயங்கள் ஏற்பட கூடிய அமைப்பாக இருப்பதால் எதிலும் கவனம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் நேர்மறையான எண்ணங்களுடன் செயல்படுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பயணங்கள் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டு. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதையும் ஒன்றுக்கு இரண்டு முறை சிந்தித்து செயலாற்றுவது நல்லது. எடுத்தோம் கவிழ்த்தோம் என்று முடிவுகளை எடுக்காதீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய முயற்சிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு தேவையற்ற விமர்சனங்கள் மன உளைச்சலை ஏற்படுத்தலாம்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சிறப்பான நாளாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு அக்கறை அதிகரித்து காணப்படும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் பொறுப்புணர்வுடன் செயல்படுவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவித் தொகைகள் கிடைக்கும். கணவன் மனைவி ஒற்றுமையில் விரிசல் விழாமல் இருக்க அனுசரித்து செல்வது நல்லது.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் சவாலான விஷயங்களை கூட எளிதாக கையாளுவீர்கள். உங்களை சுற்றி இருக்கும் எதிர்மறை ஆற்றல் விலக்கி, கட்டுக்கோப்புடன் செயல்படுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு தேவையற்ற விமர்சனங்கள் எழ வாய்ப்புகள் உண்டு. பல தடைகளைத் தாண்டிய முன்னேற்றம் உண்டு. ஆரோக்கியத்தில் அக்கறை கொள்வது நல்லது.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எண்ணிய எண்ணங்களுக்கு ஏற்ப பலன்களும் கிடைக்கும். நற்சிந்தனைகள் அதிகரித்துக் காணப்படுவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு தேவையற்ற விமர்சனங்கள் வரும். ஒன்றுக்கு பலமுறை சிந்தித்து முடிவெடுப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சிக்கலான விஷயங்களைக் கூட உங்கள் சாதுரியத்தால் சுலபமாக முடித்துக் காட்டுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு துணிச்சலும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் தங்களுடைய திறமையை வெளிக் காட்டக்கூடிய நல்ல நாளாக இருக்கும். வாகன ரீதியான வீண் விரயங்கள் சந்திக்கலாம் என்பதால் கவனம் தேவை.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தொட்டது துலங்கும் இனிய நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் வருமானத்தை இரட்டிப்பாக்க முயற்சி செய்வீர்கள். உங்களுடைய அயராத உழைப்பு படிப்படியான முன்னேற்றத்தை கொடுக்கும். பெரிய மனிதர்களின் ஆலோசனை கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு நீண்ட நாள் பிரார்த்தனை நிறைவேறும்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பார்த்தவை சரியான நேரத்தில் நடைபெறுவதில் இடையூறுகள் ஏற்படலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பழைய கடன் பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நேர்மறையான அணுகுமுறை வெற்றி வாய்ப்புகளை அள்ளிக் கொடுக்கும். புதிய பொருள் சேர்க்கை ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் தேவையற்ற சிக்கல்களில் மூக்கை நுழைக்காமல் இருப்பது நல்லது. குடும்பத்தில் உங்களுடைய கை ஓங்கி இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு மனோபலம் அதிகரிக்கும். ஒரு சிலருக்கு திடீர் அதிர்ஷ்டம் ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வீண் பழி ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு எனவே கவனம் தேவை. ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்