மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எதிர்பார்க்கும் சில விஷயங்கள் ஏமாற்றம் தர வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு வாடிக்கையாளர்களின் மத்தியில் நன் மதிப்பு அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட கால பிரச்சனைகள் தீரும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள்.
ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் எதிலும் பொறுமை தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு புதிய விஷயங்களில் தேவையில்லாத அலைச்சலையும் ஏற்படுத்தலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புது வெளிச்சம் தென்படும். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் நீங்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் எதிர்பாராத நன்மைகளை அடையப் போகிறீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு நீங்கள் எதிர்பார்க்கும் வருமானம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சுற்றியிருக்கும் பகைவர்களை இனம் கண்டு கொண்டவர்களின் சூழ்ச்சிகளை முறியடிக்கும் தைரியம் பிறக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும்.
கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். சுபகாரியத் தடைகள் விலகி திருமண யோகம் கைகூடி வரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பொறுப்பு அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் இடத்தில் இருந்து பணவரவு இருக்கும். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர்.
சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் சுபிட்சம் நிலவும். இறை வழிபாடுகளில் ஆர்வம் அதிகரித்து காணப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் சக உழைப்பாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்து வேலையில் கவனம் செலுத்துவது நல்லது.
கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் கிடைக்க வேண்டிய இடத்தில் இருந்து கிடைக்க வேண்டிய பணம் கைக்கு கிடைக்கும். வராத பழைய பாக்கிகள் வசூலாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மேலும் விழிப்புணர்வுடன் செயல்படுவது நல்லது. உத்யோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வது உத்தமம். ஆரோக்கியம் சீராக இருக்கும்.
துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் தொட்டதெல்லாம் வெற்றியாக கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு நீங்கள் எதிர்பார்க்கும் நன்மைகளை பெற இருக்கிறீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் யோகம் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்கள் மூலம் ஆதரவு கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வதன் மூலம் பல பிரச்சினைகளை தீர்க்கலாம். பொருளாதாரம் ஏற்றம் காணும் என்றாலும் கவனம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு புதிய ஒப்பந்தங்களில் எச்சரிக்கை தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்த ஒரு முடிவையும் ஒருமுறைக்கு பலமுறை ஆலோசனை செய்துவிட்டு எடுப்பது நல்லது.
தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தின் மீதான அக்கறை அதிகரித்து காணப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு சக போட்டியாளர்கள் தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அரசு வழி காரியங்களில் அனுகூலம் உண்டு. கணவன் மனைவிக்கு இடையே பிரச்சனைகள் தீரும். இருவரும் மனம் விட்டு பேசிக் கொள்வது நல்லது.
மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் மனதில் இருந்து வந்த சஞ்சலங்கள் தீரும். சரியான முடிவை எடுக்க கூடிய ஆற்றல் பிறக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உடைய மனநிலையில் சற்று தடுமாற்றம் ஏற்படலாம். எந்த ஒரு விஷயத்திலும் சமயோசிதமாக முடிவெடுப்பது நல்லது.
கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் குழப்பங்கள் தொலையும். அடுத்தவர்கள் விஷயங்களில் கவனம் செலுத்தாமல் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பதை கவனிப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் கூட்டாளிகள் மூலம் அனுகூல பலன் பெறுவீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்கள் உடைய மனநிலை சோர்வுடன் காணப்படும்.
மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தின் மீதான அக்கறை அதிகரிக்கும். அவர்களுடைய தேவையை அறிந்து பூர்த்தி செய்வீர்கள். பொருளாதார ரீதியான ஏற்றம் மனதிற்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் பெருகும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு ஊதிய உயர்வு ஏற்படுவதில் சாதக பலன் உண்டு. ஆரோக்கியத்தில் கூடுதல் அக்கறை செலுத்துவது நல்லது.