மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தில் இருக்கும் நபர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபடுவதை தவிர்ப்பது மன அமைதிக்கு வழிவகுக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வாகன ரீதியான பிரச்சனைகள் ஏற்படும் என்பதால் கவனம் தேவை. சுய தொழிலில் இருப்பவர்கள் கூடுதல் உழைப்பை கொடுப்பீர்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் கணவன் மனைவி இடையே நடந்து வந்த பனிப்போர் நீங்கும். சுயதொழிலில் இருப்பவர்களுக்கு தேவையற்ற கோபம் சங்கடங்களை ஏற்படுத்தும் என்பதால் விட்டு கொடுத்து செல்வது நல்லது. உத்யோகத்தில் உள்ளவர்கள் மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வது உத்தமம். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சி நல்ல பலன் தரும்.
மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய சுய உழைப்பு பலன் தருவதாக அமைய இருக்கிறது. நீங்கள் கஷ்டப்பட்டது வீண் போகாது. தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய முதலீடுகளை செய்வதற்கு அற்புதமான நாளாக இருக்கும். கணவன் மனைவி இடையே புதிய புரிதல் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிச்சுமை அதிகரிக்கும்.
கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதையும் போராடித்தான் பெற வேண்டியிருக்கும். கணவன் மனைவி இடையே நடக்கும் பிரச்சனைகளை வெளியில் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இழுபறியில் இருந்த சில விஷயங்கள் நினைத்தபடி நடக்கும். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு தொட்டதெல்லாம் துலங்கும் அற்புதமாக இருக்கும்.
சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதையும் நேர்மையாக சிந்திப்பது நல்லது. தொட்டதெல்லாம் பொன்னாகும் அற்புத வாய்ப்புகள் இருப்பதால் மன மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் தீட்டிய திட்டங்கள் நிறைவேறுவதில் இடையூறுகள் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக போட்டியாளர்கள் மத்தியில் மரியாதை உண்டாகும்.
கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் மாற்ற நினைக்கும் விஷயங்களில் சிந்தித்துச் செயலாற்றுவது நல்லது. கணவன் மனைவி இடையே நடக்கும் பிரச்சனைகள் படிப்படியாக தானாகவே சரியாகிவிடும். பேச்சை வளர்த்துப் பெரிதாக்காமல் இருப்பது நல்லது. சுய தொழிலில் அதிக லாபம் காணலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மறைமுக எதிரிகளின் தொல்லை அதிகரிக்கும்.
துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உற்சாகம் தரக்கூடிய அற்புதமான அமைப்பாக இருக்கிறது. சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நீங்கள் நினைத்ததை சாதித்து காட்ட கூடிய தைரியம் பிறக்கும். புதிய வாய்ப்புகளையும் பெறுவீர்கள். கணவன் மனைவி பிரச்சனைகள் பெரிதாகாமல் இருக்க விட்டு கொடுத்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் யாரையும் பகைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு அதிக கவனம் தேவை. முன்பின் தெரியாதவர்களின் அறிமுகத்தை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் சுய முடிவு எடுப்பது உத்தமம். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள்.
தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்கொள்ளும் விஷயங்கள் உங்களுக்கு படிப்பினையை பெற்று தரும். அனுபவ அறிவை அதிகரித்துக் கொள்ளும் வாய்ப்புகள் அமையும். சுய தொழிலில் எதிர்பாராத திடீர் திருப்பங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பற்றிய நுணுக்கங்களை கற்றுக் கொள்ளும் வாய்ப்புகள் அமையும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் குறையும்.
மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நண்பர்கள் வட்டம் விரிவடையும். புதிய முயற்சிகள் வெற்றி தரும். கணவன் மனைவி இடையே நடக்கும் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். வெளியிட பயணங்களின் பொழுது உடைமை மீது கவனம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் கூடுதல் பொறுப்புணர்வுடன் இருப்பது நல்லது. கூட்டாளிகளுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் தீரும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.
கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அற்புதமான அமைப்பாக இருப்பதால் தடைப்பட்ட முயற்சிகள் வெற்றிக்கு வரும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத சலுகைகள் கிடைக்கும். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு அரசு வழி அனுகூலம் உண்டாகும். பூர்விக சொத்துக்கள் லாப பலனை கொடுக்கும்.
மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் தீர கூடிய அற்புதமான நாளாக இருக்கிறது. கணவன்-மனைவி பிரச்சனைகள் தீரும். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத இடங்களிலிருந்து பண வரவு திருப்திகரமாக இருக்கும். பெரிய தொகை ஈடுபடுத்துவதில் கவனத்துடன் இருப்பது நல்லது. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும்.