மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்கள் இந்த நாள் உங்கள் செலவுகளை குறைத்துக் கொள்வது மிகவும் நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் உங்களை பற்றிய விமர்சனத்தை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் வேலையில் கவனம் செலுத்துவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிதானம் தேவை. பெண்களுக்கு வைராக்கியம் உண்டாகும்.
ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்கள் இந்த நாள் உங்கள் தனிமையை தவிர்த்து மற்றவர்களுடன் கலந்துரையாடுவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் போட்டியாளர்கள், பகைவர்களை எதிர்த்து சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணிகளை செவ்வனே செய்து முடிப்பீர்கள். கணவன், மனைவி உறவு சிக்கல் உண்டாகும்.
மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்கள் இந்த நாள் உங்களுடைய தனித்திறமை மற்றவர்களுக்கு எடுத்துக் காட்டக் கூடிய அற்புதமான அமைப்பாக இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் வெளியிட பயணங்களின் பொழுது வாகனத்தில் கவனம் செழுத்தவும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் தங்களுடைய உயர் அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாமல் இருப்பது உத்தமம். பெண்கள் தடைகளை தாண்டி முன்னேறுவீர்கள்.
கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்கள் இந்த நாள் திட்டமிட்ட காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிக்க கூடிய அற்புதமான அமைப்பாக இருக்கிறது. விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி கொடுக்கும். சுய தொழிலில் எதிர்பாராத திடீர் திருப்பங்கள் ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளுடன் இணக்கமாக இருப்பது நல்லது. வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை அமையும்.
சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்கள் இந்த நாள் உங்களுக்கு சகோதர, சகோதரர் வழியில் அனுகூலங்கள் உண்டாகும். சுய தொழிலில் இருப்பவர்கள் முக்கிய முடிவுகளை எடுப்பதில் கவனம் தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்கள் புதிய பொறுப்புகளை சுமக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். குடும்பத் தேவைகளை எளிதாக பூர்த்தி செய்து கொள்வீர்கள். பெரிய மனிதர்களின் சந்திப்பு அமையும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.
கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்கள் இந்த நாள் உங்களுடைய மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. தடைப்பட்ட சுப காரிய முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் பாதியில் நின்ற பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைப்பதில் தடைகளை சந்திக்கலாம். ஆரோக்கியத்தில் கூடுதல் அக்கறை செலுத்துங்கள்.
துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்கள் இந்த நாள் உங்களுடைய குடும்பத்தில் அமைதி நிலவும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் பெரிய தொகையில் கவனம் செலுத்தவும். கொடுக்கல் வாங்கல் பிரச்சனைகள் வலுவாகும் என்பதால் எச்சரிக்கை தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக பணியாளர்களின் ஒத்துழைப்பை பெறுவீர்கள். கணவன், மனைவி கருத்து வேறுபாடு பிரச்சினைகள் தீரும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் இந்த நாள் நீங்கள் உங்களுடைய தேவையற்ற சந்தேகங்களை தவிர்த்துக் கொள்வது நல்லது. சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் தேவையற்ற வார்த்தைகளை உபயோகிப்பதை தவிர்க்கவும். நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும் என்பதால் விழிப்புணர்வுடன் செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மன அமைதி இருக்கும். கணவன்-மனைவி இடையே அன்பு அதிகரிக்கும்.
தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்கள் இந்த நாள் உங்களுடைய முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது. தேவையற்ற கோபம், தேவையற்ற விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மற்றவர்களை பகைத்துக் கொண்டு செயல்படுவதைக் காட்டிலும், விட்டு கொடுத்து செல்வது நல்லது. சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு எதிர்பாராத திருப்பம் உண்டாகும்.
மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்கள் இந்த நாள் உங்களுடைய உணர்வுகளை மற்றவர்களுடன் எளிதாக புரிய வைக்க முயற்சி செய்வீர்கள். குழப்பங்கள் நீங்கி தெளிவான சிந்தனை பிறக்கும். கணவன், மனைவி இடையே எதையும் பெரிதாக்காமல் அமைதியாக பேசி தீர்த்துக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் தங்கள் கருத்துக்களை முன்வைப்பதில் உறுதியாக இருப்பது நல்லது. சிலருக்கு புதிய சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு.
கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்கள் இந்த நாள் தேவையற்ற செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுக்கு கிடைக்க வேண்டிய தொகை கைக்கு வந்து சேரும். கணவன், மனைவியிடையே இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களுக்கு பிடித்தவர்களிடம் இருந்து சுப செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். ஆரோக்கியம் படிப்படியாக முன்னேற்றம் அடையும்.
மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுக்கு சாதகமான நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் தன்னிச்சையாக எந்த ஒரு முடிவையும் எடுப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களுடைய வெற்றியை காண கூடிய சந்தர்ப்பங்களை பெறுவீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் தீர்ந்து ஒற்றுமை பலப்படும்