மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலமான பலன்கள் கிடைக்க கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு லாபம் அதிகரித்து காணப்படும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் அமைதியைக் கடைபிடிப்பது நல்லது.
ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய புதிய முயற்சிகள் பலன் தரும் வகையில் அமைப்பு உள்ளது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு வெளியிடங்களில் இருக்கும் நட்பு வட்டம் விரியும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் தங்கள் வேலைகளை கூடுதல் அக்கறை செலுத்துவது நல்லது.
மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய இரக்க குணத்தால் பலருடைய மனங்களில் இடம்பிடித்த வாய்ப்புகள் உண்டு. சுய தொழிலில் மந்த நிலை காணப்பட்டாலும் பொருட் தேக்கம் ஏற்படாது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தில் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சக பணியாளர்களின் ஆதரவு பெருகும்.
சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சுறுசுறுப்பாக செயல்பட கூடிய நாளாக அமைய இருக்கிறது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மன அமைதி இருக்கும். சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் பெரிய தொகையை ஈடுபடுத்தும் பொழுது உரிய கவனம் தேவை. தடைப்பட்ட சுபகாரியங்கள் முடிவடையும்.
கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மகிழ்ச்சியான நாளாக அமைகிறது. சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு தங்கள் பணிகளில் கூடுதல் அக்கறை ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் உடைய பேச்சாற்றல் மற்றவர்களின் பாராட்டுக்கு உரியதாக அமைய இருக்கிறது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.
துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தில் இருக்கும் மன அமைதி நீடிக்கும். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நல்ல மரியாதை இருக்கும். பொருளாதார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் கூடுதல் விழிப்புணர்வுடன் செயல்பட கூடிய நாளாக இருக்கிறது. சுயதொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுடைய முனைப்பு அதிகமாக இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் உடல் நிலை சீராக இருக்கும். தேவையற்ற குழப்பங்களை தவிர்த்து கொள்வது நல்லது.
தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் வெளியிடங்களில் கவனம் தேவை. தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது உத்தமம். சுய தொழிலில் நீங்கள் முக்கிய முடிவுகளை சற்று தள்ளிவைப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு போட்டி பொறாமைகள் அதிகரித்து காணப்படும்.
மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய சுய முயற்சியில் முன்னேறக் கூடிய வாய்ப்புகளை பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே என்ற சிலர் நினைப்பர் நினைக்க வாய்ப்புகள் அமையும் என்பதால் விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது. உத்யோகத்தில் நிம்மதி இருக்கும்.
கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலமான பலன்கள் உண்டாகும் கூடிய அற்புதமான நாளாக நீடிக்கிறது. அரசு காரியங்கள் சாதகமாக பலன் கொடுக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தேவையற்ற அலைச்சல் ஏற்படலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்ப்பதை விட லாபம் பெருகும்.
மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய முழு முயற்சியை கொடுப்பது நல்லது. குடும்பத்தில் இருக்கும் மூத்தவர்களிடம் அனுசரித்து செல்வது உத்தமம். சுய தொழிலில் லாபம் இரட்டிப்பாகும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் வாகனங்களை சந்திக்கலாம். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள்.