மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் அனுகூல பலன் பெறப் போகிறீர்கள். தொலைதூர இடத்திலிருந்து இனிப்பான செய்திகளை பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த பண பிரச்சனைகள் ஓரளவுக்கு முடிவுக்கு வரும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் சூழ்நிலை அறிந்து செயல்படுவது நல்லது.
ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் கடினமான உழைப்பு நல்ல பலனைக் கொடுக்கும். தேவையற்ற சிந்தனைகளை மனதில் இருந்து தூக்கி எறிந்துவிட்டு சுயமாக முடிவு எடுப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு அக்கம் பக்கத்தினரின் ஆதரவு பெருகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் தீரும்.
மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எடுக்கப் போகும் முடிவுக்கு சிலர் எதிர்ப்பு தெரிவிக்க வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபார துறையில் இருப்பவர்களுக்கு விமர்சனங்கள் அதிகரிக்கும். தொலை தூர இடங்களுக்கு பயணம் செல்வதை கூடுமான வரை தவிர்ப்பது நல்லது. உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு மன நிறைவு இருக்கும்.
கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பார்ப்பதை விட அதிக லாபம் கிடைக்க இருக்கிறது. தொலை தூர இடங்களில் இருந்து வரக்கூடிய செய்திகளில் நன்மைகள் உண்டாகும். சுபகாரியத் தடைகள் விலகும். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நண்பர்களின் உதவிக்கரம் கிடைக்கும். புதிய சொத்துக்கள் வாங்கி மகிழும் யோகமுண்டு.
சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் கர்வத்துடன் கம்பீரமாக செயலாற்றக் கூடிய இனிய நாளாக அமைய இருக்கிறது. குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை கொண்டாடுவார்கள். தேவையற்ற விஷயத்தில் மூக்கை நுழைப்பதை தவிர்த்து உங்கள் வேலையில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. சுபகாரியம் நல்ல முடிவு தரும்.
கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் கடமையில் கூடுதல் அக்கறை தேவை. அலட்சியம் பல இழப்புகளை சந்திக்க வைக்கும் என்பதால் விழிப்புணர்வுடன் செயல்படுவது நல்லது. கணவன் மனைவி இடையே இருக்கும் பிரச்சனைகளை பேசி தீர்த்துக் கொள்வீர்கள். சுபகாரியத் தடைகள் விலகி பேச்சுவார்த்தை முடிவுக்கு வரும்.
துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கக்கூடும். புதிதாக பொருட்கள் வாங்க நினைப்பவர்களுக்கு கவனம் தேவை. சகோதர சகோதரிகளுக்கு இடையே இருந்து வந்த மனக்கசப்புகள் தீரும். உடல் ஆரோக்கியம் பற்றிய சிந்தனையும் மேலோங்கி காணப்படும். இறை வழிபாடுகளில் அதிக நாட்டம் ஏற்படும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாளை ஏற்றம் தரக்கூடிய அமைப்பாக இருப்பதால் நீங்கள் தொட்டதெல்லாம் ஜெயமாகும். தொழில் மற்றும் வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும். கவலைகளை மறக்க தேவையற்ற விஷயங்களை தவிர்ப்பது நல்லது. கணவன் மனைவி இடையே சிறுசிறு சண்டை சச்சரவுகள் வந்து மறையும்.
தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பாராத திடீர் மாற்றத்தை சந்திக்க இருக்கிறீர்கள். தொழில் மற்றும் வியாபார ரீதியான புதிய முயற்சிகளுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் எடுக்கும் முடிவுகளுக்கு சாதகப்பலன் உண்டாகும். பிள்ளைகள் வழியில் நல்ல செய்திகள் கிடைக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.
மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மனம் மகிழும் படியான நல்ல நிகழ்வுகள் நடைபெற இருக்கிறது. கணவன் மனைவி இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகளை கலைந்து ஒருவரை ஒருவர் மனம் விட்டு பேசிக் கொள்வது நல்லது. விட்டு சென்ற உறவுகள் உங்களை தேடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வருமானம் பெருகும். சுய தொழிலில் லாபம் உண்டு.
கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிப்பான செய்திகள் கிடைக்கவிருக்கிறது. தொலைதூர பிரயாணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்புகள் உண்டு. உங்களுடைய நட்பு வட்டம் மேலும் விரிவடையும். புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதில் ஆர்வம் அதிகரிக்கும். வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வாடிக்கையாளர்களிடம் நல்ல மதிப்பு உண்டாகும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் கவனம் தேவை. சாதகமற்ற அமைப்பு என்பதால் பல இடையூறுகளை சந்திக்க நேரும். சுப காரியத்தில் தடைகள் ஏற்படலாம். எந்த ஒரு முக்கிய முடிவையும் ஒத்தி வைப்பது நல்லது. தொலை தூர இடங்களிலிருந்து திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும். ஆரோக்கியத்தில் எந்த வந்த பாதிப்புகள் படிப்படியாக குறையத் துவங்கும்.