மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. நீங்கள் வேண்டாம் என்று விட்டுவிட்ட விஷயம் அதுவாகவே உங்களை தேடி வரும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் தங்களுடைய முழு சக்தியையும் கொடுத்து உழைப்பின் பயனை பெறுவீர்கள். ஆரோக்கியத்தையும் சற்று கவனியுங்கள்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. தொட்டதெல்லாம் பொன்னாகும் என்பதால் முக்கிய முடிவுகளை தயக்கமில்லாமல் எடுக்கலாம். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும் எனவே கூடுதல் பணி சுமையை பெறுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளுடன் தேவையில்லாத வாக்குவாதங்கள் ஏற்படலாம் எனவே அவசரப்படாமல் இருப்பது நல்லது.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய திறமையை வெளி உலகத்திற்கு காட்டக்கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. சுயதொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நீங்கள் நினைத்தவை நினைத்தபடி நடக்கும் என்பதால் கவலை கொள்ள தேவையில்லை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத திருப்பங்கள் நிகழலாம் எச்சரிக்கை தேவை.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய தேவையற்ற பொழுது போக்குகளை தவிர்த்து வேலையில் கண்ணும் கருத்துமாக இருப்பது நல்லது. கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் பிரச்சனைகள் படிப்படியாக முடிவுக்கு வரும். சுய தொழிலில் ஏற்றம் காணும் அமைப்பு என்பதால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணிச்சுமை கூடும் இதனால் டென்ஷன் இருக்கும்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய சுய சிந்தனை மற்றவர்களுக்கு உபயோகப்படும் படியாக இருக்க போகிறது. எந்த ஒரு முக்கிய முடிவுகளையும் தைரியமாக எடுப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நீண்ட பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவியிடையே இருக்கும் ஒற்றுமையில் விரிசல் விழ வாய்ப்புகள் உண்டு எனவே நிதானம் காப்பது நல்லது.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத நல்ல விஷயங்கள் நடக்கப் போகிறது. நீங்கள் செய்ய முடியாது என்று நினைத்த காரியத்தையும் செய்து முடித்து பாராட்டுக்கள் பெறுவீர்கள். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை உயரம் புதிய யுத்திகளை கையாளுவது நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் திறமையை மெருகேற்றுவீர்கள்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் துணிச்சலான விஷயங்களை செய்வீர்கள். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு செல்லும் இடமெல்லாம் புகழ் உண்டாகும். கணவன் மனைவி இடையே ஒற்றுமைக்கு குறைவிருக்காது. பெரியோர்களின் பேச்சைக் கேட்டு நடப்பது பல அனுகூலமான நல்ல பலன்களை கொடுக்க வல்லது. ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகளையும் உடனுக்குடன் கவனியுங்கள்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எடுக்கக்கூடிய முக்கிய முடிவுகளுக்கு ஆதரவு கிடைப்பதில் தடைகள் நீடிக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை பலப்படும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு வம்பு வழக்குகள் மூலம் அதிருப்தி ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு எனவே எச்சரிக்கை உடன் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
தனுசு:
தனுசு பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய அமைப்பு சாதகமற்றதாக இருக்கிறது என்பதால் முக்கிய முடிவுகளை ஒத்தி வையுங்கள். சுப காரிய தடைகள் தொடர்ந்து நீடிக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு மந்த நிலை காணப்படும் எனினும் பொருள் தேக்கம் ஏற்படாது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் உண்டு. பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூல பலன்கள் உண்டாகும்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய மனதில் இருந்து பேசும் வார்த்தைகளில் இனிமை தேவை. கணவன் மனைவி இடையே அன்னோன்யம் அதிகரிக்கும். சுப காரிய முயற்சிகளில் இருந்து வந்து தடைகள் நீங்கும். வேலை தேடி அலைந்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத வகையில் கிடைக்க வேண்டிய சில விஷயங்கள் தட்டிப் பறிக்க வாய்ப்புகள் உண்டு.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய சுய முடிவுகள் திருப்திகரமாக இருக்கும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு புதிய பணியாற்றல் மூலம் அனுகூல பலன் கிடைக்கும். தேவையற்ற கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் சக போட்டியாளர்கள் மேலும் வலுவாக வாய்ப்புகள் இருப்பதால் கூடுதல் ஒத்துழைப்பு நல்குவது நல்லது.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்ததை அடைந்து காட்டுவீர்கள். விடாப்பிடியான முயற்சி விஸ்வரூப வெற்றியை கொடுக்கும். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் சிறு சிறு சண்டை சச்சரவுகள் நீங்கும். பொருளாதார ஏற்றம் சிறப்பாக இருப்பதால் குடும்ப தேவைகளை எளிதாக பூர்த்தி செய்வீர்கள். முன்பின் தெரியாதவர்களின் அறிமுகம் தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு முக்கிய ஆவணங்களை கையாளுவதில் கவனம் தேவை.