மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதையும் செய்து காட்டக்கூடிய துணிச்சல் பிறக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நீங்கள் செய்ததை சொல்லிக் காட்ட வேண்டாம். உத்தியோகஸ்தர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் மறையும். குடும்ப பொறுப்புகள் கூடும்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதையும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து விட்டு முடிவெடுங்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றும் எண்ணம் மேலோங்கி காணப்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கடமையில் கூடுதல் அக்கறை தேவை.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய கனவுகள் நிறைவேற கூடிய நல்ல நாளாக இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்ப்புகள் அடங்கும். தேவையற்ற வீண் விவாதங்கள் தவிர்க்க வேண்டும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கவலைகள் நீங்கி நிம்மதி பிறக்கும்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் உங்களுடைய சொந்த முயற்சிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்க போராடுவீர்கள். விமர்சனங்களை தாண்டிய தன்னம்பிக்கை மேலோங்கி காணப்படும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு லாபம் உயரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சமூகமான சூழ்நிலை காணப்படும். ஆரோக்கியம் மேம்படும்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் வீண் விரயங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. தேவையில்லாத செலவுகளை கட்டுப்படுத்துவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் உங்களுடைய கூட்டு முயற்சிக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் புதிய விஷயங்களில் தலையிடும் முன் கவனம் தேவை. ஆரோக்கியம் சீராகும்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய கவனத்தை வேறு ஒரு திசையில் செலுத்த முயற்சிக்க வேண்டாம். கடமையில் கூடுதல் அக்கறையுடன் இருப்பது நல்லது. குடும்ப பொறுப்புகளை புறக்கணிக்காதீர்கள். சுய தொழிலில் எதிர்பார்க்கும் லாபம் கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பழைய நண்பர்களை சந்திக்கும் வாய்ப்புகள் உண்டு.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய கவனம் முழுவதும் வேலையில் இருப்பது நல்லது. தேவையற்ற விஷயங்களை பற்றிய சிந்தனையை தகர்த்தெறியுங்கள். சுய கட்டுப்பாடு மிகவும் முக்கியம். தொழிலில் புதிய முயற்சிகளுக்கு உத்வேகத்துடன் செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் கொடுத்த வேலையை சரியாக செய்து முடிக்க பாடுபடுவீர்கள். ஆரோக்கிய பாதிப்புகள் கவனம் தேவை.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய மனதை அலைபாய விடாமல் இருப்பது நல்லது. கணவன் மனைவி இடையே நடக்கும் பிரச்சனைகளை பேசி பேசி பெரிதாகாமல் அமைதி காப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு தனலாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய கருத்துக்களை பின் வாங்காமல் தைரியமாக முன் வைப்பது நல்லது. மற்றவர்களை மட்டம் தட்டி பேச வேண்டாம். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கணிசமாக உயரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் மீது அதிருப்தி உண்டாக வாய்ப்புகள் உண்டு. பொறுமை தேவை.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் மனம் மகிழும்படியான நிகழ்வுகள் நடைபெறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த இடத்தில் இருந்து ஒப்பந்தங்கள் கிடைக்கும். புதிய விஷயத்தை கற்றுக் கொள்வதில் ஆர்வத்தை குறைத்துக் கொள்ளாதீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு எதிரிகளின் தொல்லை அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு கவனம் தேவை.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய குடும்ப பிரச்சினைகளை பற்றி வெளியில் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. முன்பின் தெரியாதவர்களின் அறிமுகம் தவிர்க்க வேண்டும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு கடமையில் கூடுதல் அக்கறை தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நீண்ட நாள் வேண்டுதல்கள் நிறைவேறும் வாய்ப்பு உண்டு.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய துயரங்கள் தீரக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. சுப காரியம் முயற்சிகளில் இருந்து வந்த தடைகள் நீங்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் தெய்வ வழிபாடுகளில் கூடுதல் அக்கறையுடன் இருப்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவதில் இடையூறுகள் ஏற்படலாம் கவனம் தேவை.