மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது நல்லது. எந்த ஒரு விஷயத்திலும் நிதானத்தை கடைபிடியுங்கள். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் நேர்மறையாக சிந்திப்பது நல்லது.
ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்காத நினைவுகளை நெஞ்சில் சுமக்கும் வாய்ப்பு உண்டு. மனதில் ஒரு புது உற்சாகம் பிறக்கும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு நேர்மறையான சிந்தனைகள் காணப்படும். இறைவழிபாட்டின் மீது ஆர்வம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் கூடுதல் பொறுப்புகளை சுமக்க வேண்டியிருக்கும்.
மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் உங்கள் கனவுகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். தொலைதூரப் பயணங்களை மேற்கொள்வீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு சாதகமற்ற அமைப்பு என்பதால் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு மனதில் அமைதி இருக்கும்.
கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சிறந்த நாளாக அமைய இருக்கிறது. உங்களுக்கு தெரியாத விஷயங்களை கற்றுக் கொள்ள முனைவீர்கள். பண ரீதியான விஷயத்தில் கூடுதல் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு எதிரிகள் உங்களுடனேயே இருப்பார்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு குழப்பங்கள் நீடிக்கும்.
சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் கவனமாக இருப்பது நல்லது. நல்லவர்கள் யார்? கெட்டவர்கள் யார்? என்று புரிந்து கொள்ளும் நேரம் வரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் புதிய ஒப்பந்தங்களை ஏற்கும் பொழுது கவனம் செலுத்துவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு வேண்டிய வேண்டுதல் நிறைவேறும்.
கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எடுக்கக்கூடிய முடிவுகளில் உறுதியாக இருப்பது நல்லது. தேவையற்ற சிந்தனைகளை கலைந்து இறைவன் மீது நம்பிக்கை வைப்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் காணும் யோகம் உண்டு. தேவையில்லாத பயணங்களை தவிர்த்து விடுங்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் வாகன ரீதியான வீண் விரயங்களை சந்திக்க நேரிடும்.
துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் இழந்த ஒரு விஷயத்தை திரும்ப பெறுவது போன்ற ஒரு உணர்வை பெறுவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் கருத்து வேறுபாடுகளை பற்றி பேசாமல் இருப்பது நல்லது. சுயதொழில் செய்பவர்களுக்கு லாபம் இரட்டிப்பாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணி சுமை கூடும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எந்த ஒரு முக்கிய முடிவையும் நிதானமாக எடுப்பது நல்லது. வேகம் விவேகம் அல்ல என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வருபவர்களுக்கு சமநிலை தவறும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கவன சிதறல் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது எனவே எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.
தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எந்த ஒரு முயற்சியையும் அதிக ஈடுபாட்டுடன் செய்வது நல்லது. கணவன் மனைவி உறவுக்கு இடையே இருக்கும் பிரச்சினைகளை பேசித் தீர்த்துக் கொள்வீர்கள். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பணம் கையில் புரளும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளிடம் பாராட்டுகள் கிடைக்கும்.
மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பல வழிகளில் இருந்தும் பணமழை பொழிய இருக்கிறது. விடாமுயற்சிக்கு உரிய விஸ்வரூப வெற்றி கிடைக்கும். பல எதிர்ப்புகள் விலகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு கூடுதல் வேலைகள் ஒப்படைக்கப்படும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் குடும்பத்தில் இருந்து வந்த எதிர்ப்புகளை சமாளித்து வெற்றி பெறுவீர்கள். உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். கணவன் மனைவி பிரச்சனைக்கு முடிவு வரும். சுய தொழிலில் நீங்கள் அதிக தொகையை ஈடுபடுத்துவதில் கவனம் செலுத்துங்கள். சுபகாரியத் தடைகள் விலகி குடும்பத்தில் ஒற்றுமை நீடிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிம்மதி கிடைக்கும்.
மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் சிந்திக்க கூடிய விஷயங்கள் நேர்மையாக இருப்பது நல்லது. செய்த தவறுகளை சரி செய்து கொள்ள முயற்சி செய்வீர்கள். தொழில் மற்றும் வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும். புதிய முதலீடுகளை செய்வீர்கள். ஒரு சிலருக்கு பொருள் சேர்க்கை உண்டாகும். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு பணி சுமை குறையும்.