இலங்கை இன்று நடைமுறைப்படுத்தப்படும் மின்வெட்டு நேரத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி, P முதல் W வரையான வலயங்களில் இன்று ஞாயிற்றுகிழமை (27-03-2022) மேலதிகமாக ஒரு மணிநேரம் மின்சாரம் அமுல்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்பாராத மின்சார பாவனை அதிகரிப்பு காரணமாக இவ்வாறு மின்வெட்டு நேரம் அதிகரிக்கப்பட்டதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதற்கமைய, குறித்த வலயங்களில் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 வரையான காலப்பகுதியினுள் ஒரு மணிநேர மின்வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, P முதல் W வரையான வலயங்களில் மாலை 3 மணி முதல் இரவு 11 மணிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் 2 மணிநேரம் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்திருந்தது.
இந்த நிலையில், தற்போது மின்வெட்டு நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.