சம்மாந்துறை – நயினாகாடு பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்சார வேலியில் சிக்குண்ட இரண்டு சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் இருவரும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த றியாஸ் முஹம்மட் ஆசீக், முஹம்மட் இப்றாஹிம் என்ற இரண்டு சிறுவர்களே மின்சார வேலியில் சிக்குண்டு உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் உயிரிழந்தவர்கள் இருவரும் பதின்ம வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிறுவர்கள் வீட்டிற்கு அருகில் உள்ள காணியொன்றில், விறகு சேகரிப்பதற்கு இன்று மதியம் சென்ற நிலையிலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும் இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்