சதொச விற்பனை நிலையங்களின் ஊடாக ஒருவர் ஒரே நேரத்தில் கொள்வனவு செய்யக்கூடிய தேங்காய்களின் எண்ணிக்கை மூன்றாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் குணவர்தன தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கையானது சராசரி இலங்கையர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகையை போலி வர்த்தகர்கள் தவறாக பயன்படுத்துவதை தடுக்கும் எனவும் அவர் கூறினார்.
தற்போது சதொச விற்பனை நிலையங்களில் நாட்டு அரிசி ஒரு கிலோகிராம் ரூ. 108க்கும், சம்பா அரிசி ரூ.128க்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்த அமைச்சர் பந்துல குணவர்தன, மஞ்சள் மற்றும் தேங்காய் ஆகியவை குறைந்த விலையில் விற்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
எனினும் குறிப்பிட்ட நபர்கள் ஒரே நேரத்தில் அதிக அளவில் கொள்முதல் செய்ததாகக் கூறப்படுவதால், இந்த கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாகவும் தெரிவித்தார்.