யாழ்.வல்வெட்டித்துறை கடல் எல்லைக்குள் நுழைந்த இந்திய இழுவை படகுகள் மோதியதில் கடலில் மூழ்கிய 4 மீனவர்களில் இருவர் தப்பிய நிலையில் , இருவர் காணாமல்போயுள்ளதாக கூறப்படுகின்றது.
சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருகையில், வல்வெட்டித்துறை கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த இந்திய இழுவை படகுகள் வல்வெட்டித்துறை மீனவர்களின் படகுகள் மீது மோதியுள்ளன.
இதன்போது ஒரு படகு கடும் சேதமடைந்த நிலையில் கரை திரும்பியுள்ளது, மேலும் அதில் பயணித்த இருவர் அதிஸ்ட வசமாக கரை சேர்ந்துள்ளனர்.
மற்றைய படகில் பயணித்த வல்வெட்டித்துறை ஆதிகோவிலடி பகுதியைச் சேர்ந்த இராகவன், வளவன் ஆகிய மீனவர்கள் இருவரும் கரை திரும்பவில்லை என மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் காணாமல்போன மீனவர்கள் இருவரையும் தேடி கரையிலிருந்து சென்று தேடுதல் நடத்தியபோதிலும் அவர்களைக் காணவில்லை என மீனவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.