தாக்குதல் ஒன்றை நடத்தத் திட்டமிட்டு ஆயுதங்களை மறைத்து வைத்திருந்த மூன்று தமிழ் இளைஞர்களைக் கைது செய்ய, பயங்கரவாத புலனாய்வு பிரிவு பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது.
ஜூலை 21 ஆம் திகதி கிரிபத்கொடையில் முச்சக்கர வண்டியில் பயணித்த ஒரு இளைஞர் ஒருவர் T-56 ஆயுதத்துடன் கைது செய்யப்பட்டார். விசாரணையில், அவர்கள் தாக்குதல் ஒன்றை மேற்கொள்ளத் தீர்மானித்திருந்தமை அம்பலமானது.
அத்துடன் குறித்த தாக்குதலை மேற்கொள்வதற்கு வவுனியாவில் உள்ள ஒரு வீட்டில் மறைத்து வைக்கப்பட்ட கைக்குண்டுகளையும் பொலிஸார் கண்டுபிடித்தனர். குறித்த கைக்குண்டுகளை கொழும்புக்கு கொண்டு அவர்கள் வரத் திட்டமிட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் குறித்த கைக்குண்டுகளை மறைத்து வைத்திருந்த மூவரின் தகவல்களையும் புலனாய்வு பிரிவு தற்போது வெளிப்படுத்தியுள்ளது.
குறித்த மூவர் பற்றிய தகவல் தெரிந்தால் 0718591966 அல்லது 0718596150 என்ற தொலைபேசி இலக்கங்களினூடாக தொடர்பு கொண்டு புலனாய்வு பிரிவுக்கு தெரிவிக்குமாறு பொதுமக்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சந்தேக நபர்கள் தொடர்பான விபரங்கள் பின்வருமாறு
சந்தேக நபர்களின் விவரங்கள்
ஜீவராசா சுஜீபன் (30 வயது)
முகவரி – காந்தி நகர், நேரியக்குளம், வவுனியா,
N.A. இலக்கம் – 950554215V
இளங்கோ இசைவிதன் (வயது – 27)
முகவரி – எண். 379, பிளாக் 03,
மானிக் பண்ணை, செட்டிகுளம்,
N.H. இலக்கம் – 199836210402
மகேந்திரன் யோகராசா (வயது – 27)
முகவரி – அராலி மேற்கு, வடுக்கோட்டை
NIC இலக்கம் – 981633881V
தெரிவிக்க வேண்டிய தொலைபேசி எண்கள்
OIC – பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவு – 071-8591966
OIC புலனாய்வுப் பிரிவு 071-8596150


