அரசாங்க ஊழியர்களுக்கு இந்த மாதம் சம்பளம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
சம்பளம் வழங்குவற்கு பணம் அச்சிடப்பட வேண்டி இருப்பதாகவும், அதற்கு அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டில் நிலவி வரும் சூழ்நிலையால் அமைச்சரவை கூட்டமொன்றை நடத்தக்கூடிய சந்தர்ப்பம் அமைவது சந்தேகமே என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பிரச்சனைக்கு உடன் தீர்வு வழங்கப்பட வேண்டுமாயின் பதில் ஜனாதிபதியை நியமிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு சில நாட்களுக்கு பிரதமர் ரணிலை பதில் ஜனாதிபதியாக நியமித்து அமைச்சரவை கூட்டமொன்றை நடத்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
அவசர அமைச்சரவை கூட்டமொன்றை நடத்தாவிட்டால் இந்த மாதம் 25 ஆம் திகதி அரசாங்க ஊழியர்களுக்கான சம்பளத்தை வழங்க முடியாது என சிரேஷ்ட அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.