கான்பூரைச் சேர்ந்த 80 வயது மூதாட்டி, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானத்திற்காக, 51,000 ரூபாய்க்கு மேல் நன்கொடை அளித்துள்ளார்.இந்தியாவில் நியமிக்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ் மற்றும் வி.எச்.பி தலைவர்கள் வீடு வீடாகச் சென்று ராமர் கோயில் கட்டுமானத்திற்கான நிதி திரட்டிவருகின்றனர், அதற்காக குறைந்தது 10 ரூபாயை ஏற்றுக்கொள்கிறார்கள்.அப்படி வசூலித்து வரும்போது, கான்பூரில் உள்ள யசோதா நகரில் வசிக்கும் 80 வயதான கிருஷ்ணா தீட்சித் தான் சேமித்து வைத்திருந்த 51,000 ரூபாய் பணத்தை கொடுத்துள்ளார்.
அந்தப் பணத்தை அவர் கடந்த 28 ஆண்டுகளாக சேமித்ததாக அவரது குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர்.இது குறித்து பேசிய கிருஷ்ணா தீட்சித், 1992-ஆம் ஆண்டு முதல் தினமும் 5 ருபாய் இதற்காகவே ஒதுக்கி சேமித்ததாகவும், அவரது குடும்ப உறுப்பினர்கள் ராமர் கோயில் இயக்கம் தொடங்கப்பட்டதிலிருந்து அதில் செயல்பட்டுவருவதாகவும் கூறினார்.
20,000 ரூபாய்க்கு மேல் ரொக்கமாக வாங்கமுடியாது என்பதனால், 51,000 ரூபாயை கிருஷ்ணா தீட்சித்தின் மகன் கவுரங் தீட்சித்தின் வங்கிக் கணக்கில் செலுத்தி பின்னர் காசோலையாக ஆர்.எஸ்.எஸ் தலைவரிடம் ஒப்படைப்பட்டுள்ளது.அதுமட்டுமின்றி, அவரது பேரனுடைய முதல் மாத சம்பளம் உட்பட மொத்த 130,900 ரூபாயை ராமர் கோயில் கட்டுவதற்காக கிருஷ்ணா தீட்சித்தின் குடும்பத்தினர் கொடுத்துள்ளனர்.