பிரித்தானிய மன்னர் சார்லசும் ராணி கமீலாவும் அமெரிக்கா செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்த ஆண்டின் முதல் பகுதியில் மன்னரும் ராணியும் அமெரிக்கா செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாயை வைத்துக்கொண்டு சும்மா இருக்காமல், தேவையில்லாமல் பேசி, ட்ரம்புடனான உறவைக் கெடுத்துக்கொண்டார் இளவரசர் ஹரியின் மனைவியான மேகன்.
ஹரியோ, தனது ஸ்பேர் என்னும் சுயசரிதைப் புத்தகத்தில் தான் போதைப்பொருள் உட்கொண்டதாக தெரிவித்த விடயத்தால், அமெரிக்காவிலிருந்து நாடுகடத்தப்படும் அபாயத்தை ஏற்படுத்திக்கொண்டார்.
பின்னர், மன்னர் சார்லசுடைய முகத்துக்காக ஹரியை நாடுகடத்தும் திட்டத்தை ட்ரம்ப் கைவிடக்கூடும் என செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், மன்னர் சார்ல்சும் ராணி கமீலாவும் அடுத்த ஆண்டின் துவக்கத்தில் அமெரிக்கா செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எப்போது, என்ன காரணத்துக்காக மன்னர் அமெரிக்கா செல்கிறார் என்பது தொடர்பான விடயங்களை பக்கிங்காம் அரண்மனை வெளியிடவில்லை.
என்றாலும், ட்ரம்புடனான தூதரக உறவுகளை ஏற்படுத்திக்கொள்ள இந்த பயணம் உதவக்கூடும் என பிரித்தானிய அரசு நம்புகிறது.
இன்னொரு முக்கிய விடயம், அடுத்த ஆண்டு, அதாவது, 2026ஆம் ஆண்டு, ஜூலை மாதம் 4ஆம் திகதி, அமெரிக்காவின் 250ஆவது ஆண்டு சுதந்திர தினம் நாடு முழுவதும் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட உள்ளது.
2007ஆம் ஆண்டு, மறைந்த பிரித்தானிய மகாராணியார் இரண்டாம் எலிசபெத் அமெரிக்காவுக்கு அரசு முறைப்பயணமாக சென்றபிறகு, வேறு எந்த பிரித்தானிய மன்னரோ ராணியோ அமெரிக்கா செல்லவில்லை என்பதால், மன்னர் சார்லசின் அமெரிக்கப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.