இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில் கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவற்றில் 60 வீதத்துக்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனை சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் மருத்துவர் ஜி.விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
சிறுவர்கள் தொடர்பில் அவதானம்
அதன்படி இந்த வருடத்தில் இதுவரை மாத்திரம் 53,901 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளது.
அத்துடன் சிறுவர்கள் மத்தியிலும் டெங்கு நோய் பரவி வருவதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
எனவே பொது மக்கள் அது குறித்து அவதானம் செலுத்த வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.