எரிபொருளுக்கான செலவுக்கு மேலதிகமாக மாதாந்தம் ஏழு பில்லியன் டொலர் நட்டத்தை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் சந்திக்க வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் விமானத்திற்கான எரிபொருளை வழங்காததால் அந்த எரிபொருளை இந்தியாவிடமிருந்து பெற வேண்டியமையினால் இந்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தியா செல்லும் விமானக் குழுவினருக்கு தங்குமிடம் மற்றும் இதர வசதிகள் செய்தல், விமானம் தரையிறக்கல் மற்றும் புறப்பாட்டுக்காகவும் செலவு ஏற்படுகின்றது.
இதற்காக ஒரு மாதத்திற்கு 25 முதல் 30 விமானங்கள் இந்தியாவிற்கு செல்வதாகவும் ஒரு நாளைக்கு ஐந்தரை லட்சம் லீட்டர் எரிபொருள் தேவை என்றும் கூறப்பட்டுள்ளது.