பொதுஜன பெரமுனவின் பெருமளவிலான உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சியில் இணையவுள்ளனர்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெருமளவிலான உறுப்பினர்கள் எதிர்காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சியில் இணையவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயநாயக்க தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் இரண்டு குழுக்கள் உருவாக்கப்படும் என்றும் ஒரு குழு ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான வலதுசாரிக் குழு என்றும் மற்றையது மக்கள் விடுதலை முன்னணி மற்றும் மேலவை இலங்கை கூட்டணி ஆகியன இடதுசாரிக் குழு என்றும் அவர் கூறியுள்ளார்.
எதிர்காலத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் குழுவும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணையும் எனவும் அதன் பின்னர் சஜித் பிரேமதாச தனித்து விடப்படுவார் அல்லது யதார்த்தத்தை எதிர்கொள்வார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.