கொழும்பில் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற வந்த ஒருவர் வைத்தியரின் கைத்தொலைபேசியை திருடிச் சென்ற சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு புளூமண்டல் பகுதியில் உள்ள வைத்தியசாலையிலேயே இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு 400,000 ரூபா பெறுமதியான கைத்தொலைபேசியை திருடிச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் 68 வயதான மருத்துவர் புளூமெண்டல் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்தக் கைத்தொலைபேசியை திருடியவரின் அடையாளம் இதுவரை கிடைக்கப்பெறாத நிலையில், அந் நபர் தொடர்பான தகவல்களை வெளிக்கொண்டு வந்து அவரைக் கைது செய்ய புளூமெண்டல் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.