மாத்தளை மாட்டிபொக்க பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தேவைக்காக கட்டுகஸ்தோட்டை நகருக்கு வருகை தந்துள்ளார்.
அப்போது அவருக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாக கட்டுகஸ்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்பெண் அணிந்திருந்த நான்கு மோதிரங்களை திருடிய சந்தேகத்தின் பேரில் வைத்தியசாலையின் தாதி ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அப் பெண் தனது வீட்டுப் பணிப்பெண்ணுடன் கட்டுகஸ்தோட்டை கொண்டதெனிய பகுதிக்கு புதன்கிழமை (25) சென்று கொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு அடிப்படை சிகிச்சை அளிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக தெரிய வந்துள்ளது.
கட்டுகஸ்தோட்டை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நோயாளி பல மோதிரங்களை அணிந்திருந்ததையும் கண்ட வைத்தியசாலை ஊழியர்கள், கண்டி தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போது மோதிரங்களை காணவில்லை என தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் வைத்தியசாலை ஊழியர்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்து ஸாருக்கு தகவல் கொடுத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்திய பொலிஸார் பொலிஸ் நாயை அனுப்பி மோப்பம் பிடித்துள்ளனர்.
அந்த நாய் சந்தேகப்பட்ட தாதியின் அருகில் சென்று நின்றதாக தெரிய வந்துள்ளது.
அதன்பின்னர் அந்த தாதியை சந்தேகத்தின் பேரில் கைது செய்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.