பத்தரமுல்ல பிரதேசத்தில் பெண்ணொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்த குற்றச்சாட்டில் குறித்த பெண் கைதாகியுள்ளார்.
சம்பவத்தில் தொடங்கொட பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம், சந்தேகநபர் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2020ஆம் ஆண்டு இந்த மோசடி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.