நுவரெலியா கந்தப்பளை இராகலை ஆகிய பிரதேசங்களில் நேற்று ( 29) மாலை பெய்த கடும் மழையினால் நுவரெலியா இராகலை மற்றும் கந்தப்பளை பிரதேசங்களில் என்றும் இல்லாதவாறு வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
இதனால் நுவரெலியா, பொரலந்த, கந்தப்பளை, கல்பாலம், இராகலை, நடுகணக்கு, ஐபொரஸ்ட், கோணபிடிய, டயகம உட்பட பல பிரதேசங்களில் காணப்படும் விவசாய நிலங்களில் வெள்ளநீர் நிரம்பியதால் பல ஏக்கர் விவசாய காணியில் உற்பத்தி செய்யப்பட்ட உருளைக் கிழங்கு மற்றும் மரக்கறி உற்பத்தியில் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.
அதேவேளை தாழ்ந்த பிரதேசங்களிலுள்ள வீடுகளில் வெள்ளநீர் புகுந்ததால் பல இடங்களில் வீடுகளும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.
நுவரெலியா இராகலை பிரதான வீதியில் கல்பாலம் கோட்லோஜ் சந்தியில் வெள்ளநீர் நிரம்பியதால் போக்குவரத்தும் சில மணிநேரம் தடைப்பட்டிருந்தமை குறிப்பிட தக்கது.
இங்குள்ள வர்த்தக நிலையங்களிலும் வெள்ள நீர் புகுந்ததால் வியாபாரமும் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.