நாட்டில் மேலும் 2,420 பேர் கொரோனா தொற்றாளர்களாக நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் வெளிநாட்டிலிருந்து வருகை தந்த 38 பேரும் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 3,13,731ஆக உயர்ந்துள்ளது. அதேவேளை கொரோனா தொற்றால் இதுவரை குணமடைந்துள்ளவர்களின் மொத்த 280,868 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் நாட்டில், தற்போது 28 ஆயிரத்து 330 பேர் வைத்திய சாலைகள் மற்றும் சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

