வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வந்த பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இச்சம்பவம் குருநாகல் – மாவத்தகம பிரதேசத்தில் நேற்றிரவு (07-06-2024) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மாவத்தகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிலஸ்ஸ பகுதியில் உள்ள வீடொன்றில் குறித்த பெண் தனியாக வசித்து வந்த நிலையில் கூரிய ஆயுதத்தினால் தாக்கி கொலைச் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவத்தில் 62 வயதான பெண்ணொருவரே உயிரிழந்திருப்பதாக தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.