வெளிநாட்டிலிருந்து வந்த இளைஞன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து காணாமல் போயுள்ளதாக பெற்றோர் தெரிவித்துள்ளார்.
கட்டாரில் பணிபுரிந்து விட்டு நாடு திரும்பிய 23 வயதான A.S.முஹமட் ரஷாட் என்ற இளைஞனே காணாமல் போயுள்ளார்.
கடந்த மாதம் 28ம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போதும், இதுவரை வீடு வந்து சேரவில்லை என பெற்றோர் தெரிவித்துள்ளனர். இது குறித்து பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதற்கமைய விமான நிலைய CCTV காணொளிகளின் படி கடந்த மாதம் 28ம் திகதி கட்டுநாயக்கா விமான நிலையத்திலிருந்து மாலை 6:35 மணியளவில் வெளியேறி உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதன் பின்னர் அவர் எங்கு சென்றார் என்பது தொடர்பான தகவல்கள் இதுவரை கிடைக்கவில்லை.
அதன் பின்னர் எந்த வாகனத்தில் யாருடன் எங்கு சென்றார் என்ற விபரம் எதுவும் இதுவரைக்கும் இல்லை. இவர் தொடர்பான தகவல்கள் தெரிந்தால், அறியத்தருமாறு பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தாய் : 077 114 5645 தந்தை : 077 186 5828