த்தாலி நாட்டையே கலக்கிய கொலை வழக்கு ஒன்றில் சம்பந்தப்பட்ட ஒருவரை நாடுகடத்த ஜேர்மனி முடிவு செய்துள்ளது.
பிரிய முடிவு செய்த காதலியைத் தாக்கிய நபர்
இத்தாலி நாட்டவரான Filippo Turetta (21) என்பவர், தனது காதலியான Giulia Cecchettin (22) தன்னை பிரிய முடிவு செய்ததால் ஆத்திரமடைந்துள்ளார். பிரியவேண்டாம் என பலமுறை வற்புறுத்தியும் தனது முடிவை Giulia ஏற்காததால், அவரை தாக்கியுள்ளார் Filippo.
அவர் Giuliaவைத் தாக்கும் காட்சிகள் அந்த இடத்திலுள்ள CCTV கமெராக்களில் பதிவான நிலையில், இம்மாதம் 11ஆம் திகதி இருவரும் மாயமானார்கள். இத்தாலி முழுவதும் பரபரப்படைய, பொலிசார் அவர்களை தீவிரமாகத் தேடிவந்தார்கள்.
பின்னர், சனிக்கிழமையன்று, Pordenone என்னுமிடத்தில், Barcis ஏரிக்கருகே, பள்ளம் ஒன்றிற்குள், பிளாஸ்டிக் கவர் ஒன்றில் சுற்றப்பட்ட Giuliaவின் உயிரற்ற உடல் கிடைத்தது. அவர் பலமுறை கத்தியால் குத்தப்பட்டிருந்தார்.
சிக்கிய குற்றவாளி
இந்நிலையில், தப்பியோடிய Filippo, ஜேர்மனிக்கே சென்றுவிட்டார். வார இறுதியில், Leipzig நகருக்கருகே அவரை கைது செய்த ஜேர்மன் பொலிசார், Halle என்னுமிடத்தில் அவரைக் காவலில் அடைத்துள்ளார்கள்.
நேற்று, Filippoவை இத்தாலிக்கு நாடுகடத்த Naumburg நகரிலுள்ள நீதிமன்றம் ஒன்று உத்தரவிட்டது. அடுத்த செவ்வாய்க்கிழமை அவரை ஒப்படைக்குமாறு இத்தாலி அதிகாரிகள் ஜேர்மன் அதிகாரிகளைக் கோரியுள்ள நிலையில், அதுவரை அவர் ஜேர்மனியில் காவலில் அடைக்கப்பட்டிருப்பார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.