ஹோட்டலில் வைத்து மனைவியை கொலை செய்த 30 வயதான இலங்கை கணவன் கைது செய்யப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் பொலிஸார் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நேற்று முன்தினம் (9 செப்டம்பர்) இச்சம்பவம் இடம்பெற்றுள்லதாக கூறப்படுகின்றது.
சிங்கபூரில் காத்தோங்கில் உள்ள ஹோட்டலில் மனைவியைக் கொன்ற குற்றச்சாட்டில் இலங்கையர் கைது செய்யப்பட்டதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மனைவியை கொலை செய்ததாக இலங்கையர் பொலிஸில் சரணடைந்துள்ளதாக கூறப்படுகின்றது. இதனையடுத்து இலங்கையர் கைது செய்யப்பட்டதுடன், ஹோட்டலில் கத்திக் குத்துக்கு இலக்கான நிலையில் மனைவி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அத்துடன் மனைவியை கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட கத்தியும் மீட்கப்பட்டுள்ளதுடன் உயிரிழந்த மனைவிக்கு 32 வயது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை மனைவியை கொன்ற குற்றம் நிரூபிக்கப்பட்டால் இலங்கையருக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம் எனவும் அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.