பாலி நாட்டில் தமிழரின் வழிபாட்டு முறைகள் தற்போதும் அந்நாட்டு மக்களால் பின்பற்றப்பட்டுவருவதாக கூறப்படுகின்றது.
பாலி நாட்டில் இருக்கும் பெஜி கிரிய நீர்வீழ்ச்சிக்கு (Beji Griya Waterfall) அருகே தமிழரின் தொண்மைக்கால வழிபாட்டு முறைகளைப் பிரதிபலிக்கும் சிவலிங்கம், விநாயகர், நாகம் என்பன இன்றும் கம்பீரமாக காட்சியளிக்கின்றன.
இந்து தமிழ் மக்களின் சிவ வழிபாடு உலகெங்கும் வியாபித்திருக்கின்றது என்பதற்கான ஆதாரமாக இது இருப்பதுடன் இன்றும்கூட பாலி மக்கள் ஆசாரசீலர்களாக அவ்விடங்களில் வழிபாடுகளை மேற்கொண்டுவருவது சிறப்புக்குரியதாகும்.
தனித்துவம் மிக்கதாக மலைகளையும் கற்களையும் உயிரோட்டமாக செதுக்கிய சிற்பங்களையும் அமைதியான அழகான சூழலில் அழகிய குளிர்மையான நீர்வீழ்ச்சிக்கு அருகிலே இறைவனை மெய்யன்போடு வணங்குவதற்கான இடமாக உருவாக்கியிருப்பது உண்மையில் வியப்பினையே தோற்றுவிக்கின்றது.