திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 52 வயதுடைய நபர் ஒருவரின் மிகப்பெரிய சிறுநீரகக் கல் சத்திரசிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளது.
இந்த சத்திர சிகிச்சையானது நேற்று (14.08.2026) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது 3 கிலோ 100 கிராம் எடையுடைய சிறுநீரகக் கல் திருகோணமலை வைத்தியர்களால் வெற்றிகரமாக அகற்றப்பட்டது.
3 கிலோ 100 கிராம் எடையுள்ள சிறுநீரக கல்
இதுவரை கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில், 2003 ஆம் ஆண்டு பிரேசிலில் 1.9 கிராம் எடையுடைய சிறுநீரகக் கல் அகற்றப்பட்டதாக உலக சுகாதார திணைக்களத்தின் அறிக்கைகளில் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், திருகோணமலை பொது வைத்தியசாலையில் தற்போது அகற்றப்பட்டுள்ள சிறுநீரகக் கல்லின் எடை 3 கிலோ 100 கிராம் ஆகும்.
இந்த சத்திரசிகிச்சை வைத்தியர் பிரகலாதன் பாலகிருஷ்ணன் தலைமையில் இடம்பெற்றதுடன், வைத்தியர் எம்.எம். ரிஷ்லி, வைத்தியர் ஜே.எம். இஹ்ஸான், வைத்தியர் சீ. பிரகலாதன் உள்ளிட்டவர்களும், மயக்க மருந்து வைத்திய நிபுணர் வைத்தியர் அமிலவும் இதில் பங்கேற்றுள்ளனர்.
திருகோணமலை பொது வைத்தியசாலையில் இவ்வாறான சிக்கலான சிறுநீரக சத்திரசிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளமை, கிழக்கு மாகாணத்தில் அரச வைத்தியசாலை மருத்துவ சேவையின் திறனை வெளிப்படுத்தும் முக்கிய சாதனையாகக் கருதப்படுகிறது.

