நாட்டுக்கு வரும் பயணிகள் வருகை மற்றும் புறப்பாடுகளில் பாரிய சரிவு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் இலங்கைக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை கடுமையாகக் குறைந்துள்ளதாக விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் பணிப்பாளர் ஷெஹான் சுமனசேகர தெரிவித்துள்ளார்.
அதேசமயம் கொரோனா தொற்றுநோய் காரணமாக நாட்டிற்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை ஒரு குறிப்பிட்ட அளவிற்கு குறைந்திருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் நாட்டில் நிலவும் தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக வருகையாளர்கள் மற்றும் செல்பவர்களின் எண்ணிக்கை 10,000 ஆக குறைந்துள்ளதாக ஷெஹான் சுமன்சேகர தெரிவித்துள்ளார்