வெவாக் பண்டிகையை முன்னிட்டு 278 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
பொது மன்னிப்பின் அடிப்படையில் இவ்வாறு கைதிகள் விடுதலை செய்யப்படுவதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் காமினி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
வெலிக்கடை, மஹர சிறைச்சாலைகள் உள்ளிட்ட நாட்டின் ஏனைய சிறைச்சாலைகளைச் சேர்ந்த கைதிகள் இவ்வாறு விடுதலை செய்யப்பட உள்ளனர்.
இவ்வாறு விடுதலை செய்யப்பட உள்ள கைதிகளில் பத்து பேர் பெண்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
வெசாக் பண்டிகைக் காலத்தில் வருடாந்தம் இவ்வாறு பொது மன்னிப்பு அடிப்படையில் ஒரு தொகுதி கைதிகள் விடுதலை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
வெசாக் தினத்தை முனனிட்டு சிறைக் கைதிகளை அவர்கள் உறவினர்கள் தடுப்புக் கூண்டுக்கு வௌியே பார்வையிடுவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சிறைக் கைதிகள் பெரும்பாலும் தடுப்புக் கூண்டுகளின் பின்னால் நிற்க வைக்கப்பட்டே அவர்களின் உறவினர், நண்பர்களைக் சந்திக்க அனுமதிக்கப்படுவார்கள். ஆயினும் வெசாக், பொசோன், புத்தாண்டு மற்றும் நத்தார் உள்ளிட்ட முக்கிய தினங்களில் கூண்டுக்கு வௌியெ வந்து உறவினர், நண்பர்களைச் சந்திப்பதற்கான அனுமதி சிறைக் கைதிகளுககு வழங்கப்படும்.
அந்த வகையில் இந்த வருடமும் வெசாக் தினத்தை முன்னிட்டு சிறைக் கைதிகளுககு தங்கள் உறவினர்களைச் சந்திப்பதற்கு இரண்டு நாட்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.