இலங்கையில் இனி வீட்டுப் பணிப் பெண்களாக தொழிலுக்கு அமர்த்தப்படுகின்றவர்களின் வயதெல்லையில் மாற்றம் ஏற்படுத்தப்படவுள்ளது.
இதனடிப்படையில் வீட்டுப் பணிப் பெண்களாக தொழிலுக்கு அமர்த்தப்படுகின்றவர்களின் வயதெல்லை 18 ஆக திருத்தப்படவுள்ளது.
இதனை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அறிவித்துள்ளது.
அதன்படி இன்னும் இரண்டு மாதங்களில் குறித்த சட்டத்தை திருத்துவதற்கான யோசனை நாடாளுமன்றத்தில் சமர்பிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது.