தான் வாங்கிய வீட்டின் பின்னால் இருந்த காங்கிரீட் பெட்டி Tony Huismanஇன் கண்களை உறுத்திக்கொண்டே இருந்திருக்கிறது.
அதை எப்படியாவது திறந்து பார்த்துவிடவேண்டும் என்று முடிவு செய்த Tony, ஒரு நாள் அதை சுற்றியிருந்த மண்ணை அகற்றிவிட்டு, அங்கிருந்த அந்த காங்கிரீட் மூடியைத் தூக்க முயன்றிருக்கிறார்.
ஆனால், அது மிகவும் கனமாக இருக்கவே, இரும்புக் கம்பி ஒன்றில் உதவியுடன் அதைத் திறந்திருக்கிறார் Tony.
சமூக ஊடகங்களில் வீடியோக்களை வெளியிடும் பழக்கமுடைய Tony, இந்த சம்பவத்தையும் வீடியோவாக எடுத்து மக்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் கொடுக்கலாம் என திட்டமிட்டிருக்கிறார்.ஆனால், அந்த மூடியைத் திறந்த Tonyக்கே எதிர்பாராத ஒரு சர்ப்ரைஸ் காத்திருந்தது அவருக்குத் தெரியாது.
காரணம், அது காங்கிரீட் பெட்டியுமல்ல, புதையலுமல்ல, அவரது வீட்டின் செப்டிக் டேங்க்.
நாற்றம் தாங்காமல் மூக்கைப் பிடித்துக்கொண்டு அங்கிருந்து ஓட்டம் பிடிக்கிறார் Tony.
ஆனால், Tony எதிர்பார்த்தாரோ என்னவோ, அவர் வெளியிட்ட அந்த வீடியோ வைரலாகிவிட்டது!