அம்பாரை அலிக்கம்பை பிரதேசத்தில் பன்றிக்கு வெடி வைக்க வெடியை வீட்டில் வைத்து தயாரித்தபோது வெடி வெடித்ததில் கணவன் மனையி இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று செவ்வபய்க்கிழமை பிற்பகல் 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
அக்கரைப்பற்று அலிக்கம்பை பிரதேசத்தைச் சோர்ந்த 65 வயதுடைய குலன் மற்றும் அவரது மனைவியான 62 வயதுடைய வெங்கட்மேரி என்பவர்களே இவ்வாறு படுகாயமடைந்துள்ளனர்.
ஆலையடிவேம்பு பிரதேச செலயகப் பிரிவிலுள்ள காட்டை அண்டிய பகுதியான குறித்த கிராமத்தில் இரவில் யானைகள் மற்றும் காட்டுவிலங்குகள் கிராமத்தில் ஊடுருவி பயர் செய்கைகளை நாசப்படுத்திவருவது வழமையானது இந் நிலையில் யாணை வெடிகளை பிரித்து அதிலுள்ள மருந்துகளை ஒன்றினைத்து அதனை பன்றிக்கு வெடிக்க வைப்பதற்காக வெடி தயாரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது தவறுதலாக வெடிமருந்து வெடித்ததில் கணவன் மனையியான இருவரும் படுகாயமடைந்துள்ளனர்.
தொடர்ந்து அக்கரைப்பற்று ஆதாரவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.