கிராண்ட்பாஸ், மஹவத்த வீதி பகுதியில் உள்ள வீடொன்றினுள் கட்டப்பட்ட விசேட இரகசிய பதுங்கு குழியில் இருந்து 03 கிலோ 926 கிராம் ஹசீஸ் போதைப் பொருள் தொகை ஒன்றை விசேட அதிரடிப்படையினர் மீட்டுள்ளதுடன் ஒருவரை கைது செய்துள்ளனர்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் விசேட சுற்றிவளைப்பு பிரிவினரால் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வீட்டினுள் கட்டப்பட்ட விசேட இரகசிய பதுங்கு குழியில் இந்த ஹஷிஸ் போதைப்பொருள் தொகை சூழ்ச்சியாக மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக விசேட அதிரடிப் படையினர் தெரிவித்தனர்.
குறித்த போதைப்பொருளின் பெறுமதி 4 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமாகும் என விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
போதைப்பொருள் தவிர, இரண்டு இலத்திரனியல் தராசுகள் மற்றும் இரண்டு கையடக்கத் தொலைபேசிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 34 வயதுடையவர் எனவும், சந்தேக நபரும் பொருட்களும் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.