களனிப் பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
42 வயதுடைய பெண்ணின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை குறித்த பெண் சில நாட்களுக்கு முன்னர் இறந்திருக்கலாமென பொலிஸார் சந்தேகிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.