பால் உற்பத்தி பெருமளவில் குறைவடைந்து வருவதால் கறவை மாடுகளை இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்ய விவசாய அமைச்சு திட்டமிட்டுள்ளது.
இலங்கையில் கறவை கன்றுகளை ஈனும் தாய் கறவை பசுக்களுக்கு பற்றாக்குறை மோசமடைந்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டில் சுமார் 800,000 எருமைகள் இருப்பதாக தேசிய கால்நடை அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.
இந்தியாவும் பாகிஸ்தானும் நாட்டின் தட்பவெப்ப நிலையைத் தாங்கக்கூடிய கறவை மாடுகளைக் கொண்டுள்ளன.
அந்த நாடுகள் தற்போது கறவை மாடுகளின் ஏற்றுமதியை நிறுத்தி வைத்துள்ளன.
இந்தியாவின் கால்நடைகளின் மரபணுக்களை திருடி புதிய இன மாடுகளை உருவாக்குவதால் அவுஸ்திரேலியா போன்ற நாடுகள் கால்நடைகளின் ஏற்றுமதியை நிறுத்திவிட்டன
கறவை மாடுகளை இறக்குமதி செய்வது தொடர்பாக இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை வெற்றியடையும் என விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.