அரசாங்கத்துக்கு எதிராக நாடளாவிய ரீதியில் இன்று முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டதால் கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையிலிருந்து விமான நிலையத்துக்கு செல்லும் நுழைவுவீதி எவரிவத்த பகுதியில் தடைப்பட்டது.
குறித்த வீதியில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றதன் காரணமாக வீதி தடைப்பட்டிருந்தது. இந்நிலையில் வௌிநாடு செல்வதற்காக விமான நிலையத்திற்கு செல்லும் பயணிகள் வாகனங்களில் இருந்து இறங்கி பயணிகள் விமான நிலையம் நோக்கி நடந்து சென்றனர்.
அது குறித்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.