மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் நேற்று (21) இடம்பெற்ற விபத்தில் பிரபல உயிரியல் ஆசிரியர் தினேஷ் முத்துகல, காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவர் பயணித்த ஜீப் எரிபொருள் பவுசருடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பவுசர் குருநாகலிலிருந்து மீரிகம நோக்கி பயணித்துக் கொண்டிருந்தது.
ஜீப் வண்டியை சாரதி அதிவேகமாக செலுத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர். மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலை 2.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்த ஆசிரியர் முத்துகல மற்றும் மூவர் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.