சிரியாவின் ஆர்வட் (Arwad) தீவுக்கு அருகில் உள்ள கடற்பிராந்தியத்தில் ஏதிலிகள் பயணித்த படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 77 பேர் வரை உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து இடம்பெற்ற தருணத்தில் லெபனான், சிரியா மற்றும் பலஸ்தீன நாடுகளைச் சேர்ந்த 120 பேர் படகில் பயணித்துள்ளனர்.
அனர்த்தம் இடம்பெற்றதை அடுத்து 20 க்கும் மேற்பட்டவர்கள் காப்பாற்றப்பட்டு சிரியாவின் டாடாஸ் நகர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.