குருநாகல் மாவட்டம் – மாவத்தகம பொலிஸ் பிரிவிற்குற்பட்ட 09 ஆம் கம்பம் கெம்பிலியத்த புராதன விகாரைக்கு முன்பாக இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 16 வயது மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த மோட்டார் சைக்கிள் வீதியில் சறுக்கி எதிர்திசையில் வந்த பஸ்ஸுடன் மோதியதில் நேற்றைய தினம் (02.11.2023) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்துக்குள்ளானவர்கள் கஹபத்வல பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
படுகாயமடைந்த சாரதியும் பின்னால் அமர்ந்து சென்ற மகளும் மாவத்தகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் 16 வயதுடைய மகள் மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.