களுத்துறையில் விடுதியொன்றின் மாடியிலிருந்து விழுந்து 16 வயதான சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் குறித்த விடுதியின் உரிமையாளரினது மனைவி காவல்துறையினரால் இன்று (11) கைதுசெய்யப்பட்டுள்ளார்.
உரிய நடைமுறைகளைப் பின்பற்றத் தவறியமைக்காகவும், சிறுமிக்கு தங்குமிடங்களை வழங்குவதற்கு முன்னர், அவளது அடையாள அட்டை உள்ளிட்ட விபரங்களைச் சரிபார்க்கத் தவறியதற்காகவும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, சிறுமியின் தொலைபேசி தரவுகள் பெறப்பட்டுள்ள நிலையில், அதனூடாக மேவதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக களுத்துறை தெற்கு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த சிறுமியின் கைபேசி சம்பவ தினத்தில் காணாமல் போயுள்ள நிலையில், அதனை கண்டுபிடிக்க தொடர்ந்தும் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.