நாட்டின் ஜனநாயக தன்மைகளை முழுமையாக அழித்துவிட்டு மியன்மாரை போன்றதொரு இராணுவ ஆட்சியை கையில் எடுக்கும் சதிகள் மும்முரமாக இடம்பெற்றுக்கொண்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
நாட்டின் இன்றைய கடன் நெருக்கடிக்கு ஒட்டுமொத்தமாக ராஜபக்ஷவினரே பொறுப்புக்கூற வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,
ராஜபக்சவினரின் ஆட்சி இனிமேலும் தொடருமானால் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன், சஹரான் அல்லது ரோஹன விஜயவீரவினால் கூட இதுவரை செய்ய முடியாத அளவிற்கு அழிவுகள் இடம்பெறும்.
இந்த நாட்டின் மொத்த கடன்களில் 86 வீத கடன்கள் ராஜபக்சவினரால் பெறப்பட்டுள்ளது. ஏனைய சகலரது ஆட்சியிலும் மொத்தமாக 14 வீத கடன்களே பெறப்பட்டுள்ளன.
நாட்டின் இன்றைய கடன் நெருக்கடிக்கு ஒட்டுமொத்தமாக ராஜபக்சவினரே பொறுப்புக்கூற வேண்டும்.
ஆகவே ராஜபக்சவினரை விரட்டியடிக்க சகல எதிர்க்கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தவும், ஆளுந்தரப்பு கூட்டணிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்த நாம் தயாராகவே உள்ளோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்