யாழ்ப்பாணத்தில் இருந்து அகதி தஞ்சம் கோரி பிரான்ஸ் சென்ற நிலையில் இளைஞன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரான்ஸில் அகதி முகாமில் தங்கியிருந்த நேற்று முன் தினம் விபரீத முடிவெடுத்து தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துள்ளதாக கூறப்படுகின்றது.
சம்பவத்தில் யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கைச் சேர்ந்த 33 வயதான இளைஞரே இவ்வாரு உயிரிழந்துள்ளார்.
கடந்த சில வருடங்களாக முகாமில் தங்கியிருந்த நிலையில் அவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில் உயிர்பிழைக்க பிரான்ஸ் சென்ற யாழ் இளைஞர் விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதேவேளை இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப்போர் காரணமாக ஐரோப்பா உள்ளிட்ட மேற்கத்தைய நாடுகள் , அகதி தஞ்சம் கோரும் இலங்கையர்ளுக்கு அடைகல வழங்கி வந்த நிலையில், போர் முடிவுக்கு வந்த பின்னர், இவ்வாறு செல்லுபவர்களின் புகலிட தஞ்சக்கோரிக்கைகளை வழங்காது இழுத்தடிப்பு செய்து வருகின்றன.
எனினும் முகவர்களின் ஆசை வார்த்தைகளை நம்பி பல லட்சங்களை செலவு செய்து இன்னும் இலங்கையர்கள் ஆபத்தான பயணங்களை மேற்கொண்டு வெளிநாடுகளுக்கு வருகின்றனர்.
அங்கு சென்ற பின்னர் முகாம்களில் அடைக்கப்படும் அவர்களின் அகதி தஞ்ச கோரிக்கைகளும் அண்மைக்காலமாக நிராகரிக்கப்படுவருவதால் மன உளைச்சலுக்கு உள்ளாகி இவ்வாறு விபரீத முடிவால் உயிரிழக்கும் சம்பங்கள் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.