பொதுவாக சமூக வலைத்தளங்களிலேயே அதிகமான வசதிகளுடன் இருக்கும் ஒரே வலைத்தளம் வாட்ஸ்அப் தான்.
இந்த நிறுவனத்தை Meta நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதால் பயனர்கள் கேட்கும் அனைத்து வசதிகளையும் உடனுகுடன் வழங்கி வருகிறது.
அந்த வகையில் சமிபத்தில் சில அப்டேட்களை வாட்சப் நிறுவனம் வழங்கியிருந்தது. இதனை தொடர்ந்து தற்போது சிறப்பான மெசேஜிங், ஆடியோ மெசேஜ் என பல புதுமையான விஷயங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
அறிமுகமாகும் புதிய வசதிகள்
1. Message Edit
ஒரு செய்தி அனுப்பிய பின்னர் அந்த செய்திகள் பிழையாகி விட்டால் அதனை அழித்து விட்டு மீண்டும் அந்த செய்தி அனுப்ப வேண்டிய அவசியம் இனி இல்லை.
செய்தி அனுப்பி சுமார் 15 விநாடிகளில் அந்த செய்தி நமக்கு ஏற்றால் போல் எடிட் செய்து கொள்ளலாம்.
2. Message Duration
தற்போது இருக்கும் ஆப்ஸனை பயன்படுத்தி 24 மணி நேரத்திற்கு மாத்திரம் தான் Message Duration செட் பண்ணலாம்.
மாறாக 1 வருடம், 180 நாட்கள், 60 நாட்கள், 30 நாட்கள், 21 நாட்கள், 14 நாட்கள், 6 நாட்கள், 5 நாட்கள், 3 நாட்கள், 2 நாட்கள், 12 மணிநேரம், 6 மணிநேரம், 3 மணிநேரம், 1 மணிநேரம் போன்ற நேரங்களிலும் கூட Message Duration வைத்து கொள்ளலாம்.
3. Pinning Messages
வாட்ஸ்அப் செய்தி அனுப்பி கொண்டிருக்கும் போது வேறொரு செயலில் செய்தி வரும். அப்போது நாம் வாட்ஸ்அப்பை அப்படியே பேக் செய்து விட்டு செல்வோம். ஆனால் வந்து பார்க்கும் போது அது மாறி இருக்கும்.
ஆனால் தற்போது வந்திருக்கும் Pinning Messages அப்டேட்டில் இந்த வசதி மாறி நடக்கும் ஓபன் செய்த பயனரின் சேட் அப்படியே இருக்கும்.
4. View Once Audio
தற்போது இருக்கும் அப்பேட்டில் புகைப்படங்கள் மாத்திரம் தான் ‘Once’ செய்து அனுப்பலாம். ஆனால் தற்போது இருக்கும் அப்டேட்டில் நாம் நமது குரலை பயன்படுத்தியும் ‘Listen Once’ என்பர் அடிப்படையில் செய்து கொள்ளலாம்.